Nanguneri Perumbathu Violence : நாங்குநேரி பெரும்பத்து வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சரத் குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Nanguneri Perumbathu Violence : நாங்குநேரி பெரும்பத்து வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான சரத் குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Published on: May 25, 2026 at 11:49 pm
திருநெல்வேலி, மே 25, 2026: நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் அரிவாள் வெட்டினால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களை நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான சரத்குமார் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் 2026 மார்ச் மாதம் 2-ஆம் தேதி டீக்கடை ஒன்றில் பைக்கில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டை வீசி, அங்கிருந்த பொதுமக்களை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தள்ளியது.
இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் பெரும்பத்து இந்திரா காலனியைச் சேர்ந்த ஜான் மார்க் (50) மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி திரினாத் கட்டா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
மேலும், இந்த கொடூர தாக்குதலில் பெரும்பத்து பகுதியைச் சேர்ந்த நெல்சன் (58), பிரபாகரன், ராமசாமி, வீராங்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் (53) மற்றும் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் உட்பட மொத்தம் 9 பேருக்கு பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று தற்பொழுது வீடு திரும்பியுள்ளனர். இந்த அதிர்ச்சிமிக்க சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான சரத்குமார் இன்று பெரும்பத்து பகுதிக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில், இந்த வழக்கு முழுமையாக முடியும் வரை குற்றவாளிகள் யாரையும் எக்காரணம் கொண்டும் ஜாமீனில் வெளியில் விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திரா காலனி பகுதிக்குச் சென்ற சரத்குமார், இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த ஜான் மார்க்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
இதையும் படிங்க : தமிழக அரசின் கடன் தள்ளுபடி உழவர்களுக்கு பயன் அளிக்காது.. பி.ஆர். பாண்டியன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com