PR Pandian: தமிழ்நாடு அரசின் கடன் தள்ளுபடி உழவர்களுக்கு பயன் அளிக்காது என விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
PR Pandian: தமிழ்நாடு அரசின் கடன் தள்ளுபடி உழவர்களுக்கு பயன் அளிக்காது என விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Published on: May 25, 2026 at 11:39 pm
சென்னை, மே 25, 2026: தமிழ்நாடு அரசின் கடன் தள்ளுபடி உழவர்களுக்கு பயனளிக்காது அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றி கழகத்தின் முலமைச்சர் விஜய் சிறுகுறு விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி செய்யப்படும். பெரு விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார்.
த.வெ.க பக்கம் விவசாயிகள்…
இதன் மீது நம்பிக்கை வைத்து விவசாயிகள் வாக்களித்துள்ளனர். தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை மத்திய அரசு தடுத்துவிட்டதால் எங்களால் அறிவிக்க இயலாது என்று கைவிரித்ததால் திமுகவுக்கு எதிராக தவெக விற்கு ஆதரவாக விவசாயிகள் வாக்களித்துள்ளனர்.
ஏமாற்றம் அளிக்கிறது
புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் விஜய் தன் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிட்டு இருக்க வேண்டுமே தவிர ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றி நிதி சுமையை காரணம் காட்டி விவசாயிகளுக்கு பயனளிக்காத கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடுவது விவசாயிகளுக்கு ஏமாற்றமே அளிக்கிறது.
இது மாதிரியான அறிவிப்புகள் கடன் சுமையில் இருக்கும் விவசாயிகளை காப்பாற்ற உதவாது. மாநில அரசுகள் தனது நிதியிலிருந்து செயல்படுத்தும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்.
கடன் தள்ளுபடி தொடர…
கடந்த காலங்களைப் பின்பற்றி கடன் வசூல் நடவடிக்கையை நிறுத்தி வைத்திட வேண்டும். நடப்பாண்டுக்காண புதிய கடன் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தீவிர படுத்த வேண்டும்.
நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொண்டு கடன் தள்ளுபடி நடவடிக்கையை தொடர வேண்டும். அதுவரையிலும் தற்போதைய அறிவிப்பை நிறுத்தி வைத்து மறுபரிசீலினை செய்ய தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சந்தர்ப்பவாத அரசியல்.. மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காதீர்.. கண்டித்த அன்புமணி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com