நாடகம் ஆடுவது யார்? மு.க ஸ்டாலினுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!

Manickam Tagore Hits Back at Stalin: நாடகம் ஆடுவது யார்? என மு.க. ஸ்டாலின் ட்வீட்டை ரி-ட்வீட் செய்து கேள்வியெழுப்பியுள்ளார் மாணிக்கம் தாகூர்.

Published on: May 26, 2026 at 10:36 am

சென்னை, மே 26, 2026: மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது” என தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட்டை ரி-ட்வீட் செய்து பதிலளித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்.

இது குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி, “107 எம்.எல்.ஏக்களுடன் திரு. விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.

ஆனால் என்ன நடந்தது? இப்போது மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?

மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும். மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குதிரைப் பேரம் பற்றி தி.மு.க, அ.தி.மு.க. பேசலாமா? செங்கோட்டையன் கேள்வி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com