Vijay’s Kohli Bat Photos Trend : விராத் கோலியின் ஆட்டோகிராப் பொறித்த பேட், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு சிறப்பு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
Vijay’s Kohli Bat Photos Trend : விராத் கோலியின் ஆட்டோகிராப் பொறித்த பேட், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு சிறப்பு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

Published on: May 24, 2026 at 12:00 pm
சென்னை, மே 24, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்ட பேட்டை பெருமையுடன் கையில் பிடித்தபடி எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. எம்.ஆர்.எஃப் நிறுவனத்தினர் வழங்கிய இந்த பரிசு, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு, எம்.ஆர்.எஃப் குழுமம் சார்பில் விராட் கோலி கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு சென்னை மாநிலச் செயலாளரகத்தில் நடைபெற்றது. எம்.ஆர்.எஃப் தலைவர் கே.எம். மம்மன், துணைத் தலைவர் அருண் மம்மன், நிர்வாக இயக்குநர் ரகுல் மம்மன் ஆகியோர் விஜயை சந்தித்து பேட்டை வழங்கினர்.
இந்நிலையில், பேட்டை கையில் பிடித்தபடி விஜய் புன்னகையுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ரசிகர்கள், “விஜய் – கோலி இணைப்பு” என பெருமையுடன் பகிர்ந்து வருகின்றனர். 2026 மே 10 அன்று, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற விழாவில், விஜய் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 2 லட்சம் கோடி கடன்.. 70 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே பணி.. அமைச்சர் நிர்மல் குமார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com