Janhvi–Ram Charan Film : ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள பெட்டி திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Janhvi–Ram Charan Film : ராம் சரண், ஜான்வி கபூர் நடித்துள்ள பெட்டி திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Published on: May 24, 2026 at 12:14 pm
ஹைதராபாத், மே 2024: நடிகர் ராம் சரண் – ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெட்டி’ திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு மத்திய தணிக்கை சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி), படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளதுடன், படத்தின் ஓட்ட நேரம் 3 மணி 9 நிமிடங்கள் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அதாவது, படத்தின் ஓட்ட நேரம் 189 நிமிடங்கள் (3 மணி 9 நிமிடங்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தில் சி.பி.எஃப்.சி, “படத்தில் உள்ள “ராஜஸ்தான்” என்ற சொல் மற்றும் ஒரு சமூக குறிப்பு நீக்கப்பட வேண்டும்” என அறிவுறுத்தியது.
‘பெட்டி’ படத்தில் ராம் சரண் ஒரு பல விளையாட்டுகளில் திறமை பெற்ற வீரராக நடிக்கிறார். அவர் கிரிக்கெட், குத்துச்சண்டை, ஓட்டம் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கும் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். மேலும் இந்தப் படம் ஆந்திரப் பிரதேசம், விஜயநகரம் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், நடிகை ஜான்வி கபூர், படத்தில் அச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘பெட்டி’ திரைப்படம் ஜூன் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் புச்சி பாபு சானாவின் இந்த படம், பெரும் வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : யோகி பாபுவின் தசாவதாரம்.. 10 வித கெட்அப்.. தீயாய் பரவும் போஸ்டர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com