ஜாஸ்பிரீத் பும்ரா கால்பந்து வீரரா? மன்னிப்பு கேட்ட ராம் சரண்!

Peddi Event in Bhopal : ஜாம்பிரீத் பும்ரா கால்பந்து வீரரா? மன்னிப்பு கோரியுள்ளார் தெலுங்கு சினிமா நட்சத்திரம் ராம் சரண்.

Published on: May 24, 2026 at 12:16 pm

போபால், மே 24, 2026: திரைப்பட நடிகர் ராம் சரண், போபாலில் நடந்த பெட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை தவறுதலாக “கால்பந்து வீரர்” என்று அழைத்தார். மேலும், போபால் மக்களை “பீஹார் மக்கள்” என தவறாக குறிப்பிட்டார். இந்த நிலையில், ராம்சரண் பின்னர் சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். முன்னதாக, ராம் சரணின் இந்தத் தவறான உரை சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையில், ரசிகர்கள் பல்வேறு நகைச்சுவை மீம்கள் உருவாக்கினர். மேலும் சிலர் “ராம் சரண் கிரிக்கெட் ரசிகர் அல்ல” என பலர் விமர்சித்தனர். இந்த நிலையில் ராம்சரண் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “இது உண்மையான மனித தவறு. கூட்டத்தின் உற்சாகத்தில் பெயர்கள் குழப்பமாகிவிட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கிரிக்கெட்டர் பும்ராவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, “நான் உங்களின் பெரிய ரசிகன். நீங்கள் இந்தியர்களை பெருமைப்படுத்துகிறீர்கள்.” எனவும் குறிப்பிட்டுள்ளார். பெட்டி திரைப்படத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூன் 4, 2026 அன்று வெளியாகிறது. படத்தை புச்சி பாபு சானா இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க : ராமாயண படத்தின் விநியோக உரிமை ரூ.450 கோடி.. இந்திய சினிமாவில் புதிய சாதனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com