பாரம்பரிய ஆபரணத் தங்கம் வாங்க வேண்டுமா? திருப்பூரில் நகைக் கண்காட்சி!

Jewellery exhibition 2026 : திருப்பூரில் தங்க நகைக் கண்காட்சி இன்று (மே 23, 2026) தொடங்கி மே 25ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.

Published on: May 23, 2026 at 2:35 pm

திருப்பூர், மே 23, 2026: திருப்பூரில் வி.பி.ஜே ஆபரண கண்காட்சி இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. இந்த ஆபரண கண்காட்சி பாரம்பரியமும் நவீனமும் இணைந்த அற்புத அனுபவமாக பார்க்கப்படுகிறது.

தங்க நகைக் கண்காட்சி

இந்தியாவின் மிகவும் நம்பகமான பாரம்பரிய ஆபரண பிராண்டான வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் (வி.பிஜே), 2026 மே 23 முதல் 25 வரை திருப்பூரில் ஆர்.கே. ரெசிடென்சி, லேபல் ஹாலில் தனது பிரத்யேக ஆபரண கண்காட்சியை நடத்துகிறது. இதில், தங்கம், வைரம், சாலிட்டெர் உள்ளிட்ட கைவினை நகைகளின் நேர்த்தியான தொகுப்பு இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகிறது.

மேலும், திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான அழகிய ஆபரணங்களை வாங்கும் சிறந்த வாய்ப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய வடிவமைப்பு, புதிய ஸ்டைல்

இது குறித்து வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் அமரேந்திரன் வும்மிடி, “ஒவ்வொரு கண்காட்சியும் வாடிக்கையாளர்களுடன் நெருக்கத்தை வலுப்படுத்துகிறது” எனக் கூறினார்.
மேலும், திருப்பூர் மக்கள், பாரம்பரிய வடிவமைப்புகளையும் நவீன ஸ்டைலையும் விரும்பி வாங்குவதை வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ் பெருமையாகக் கருதுகிறது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து, “பாரம்பரியத்தையும் காலத்தைக் கடக்கும் வடிவமைப்புகளையும் கொண்டாடும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபரணங்கள் காட்சிப்படுத்தப்படும்” என்றும் அவர் கூறினார்.

காட்சிப்படுத்தப்படும் ஆபரணங்கள்

இந்தக் கண்காட்சியில் மணப்பெண்களுக்கான தங்கம் மற்றும் வைர நகைகள், நெக்லஸ், வளையல்கள், காதணிகள், மோதிரங்கள், சங்கிலிகள், நவரத்தினங்கள், சாலிட்டெர் நகைகள் ஆகியவை இடம்பெறுகின்றன.

மேலும், ஒவ்வொரு ஆபரணமும் நுணுக்கமான கைவினை திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது, தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் உயர்தர நகைகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறப்பான அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இக்கண்காட்சியில், காலத்தால் அழியாத கலைத்திறனை நவீன கண்ணோட்டத்துடன் இணைத்து உருவாக்கப்பட்ட ஆபரணங்களும் இடம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க : சரிவில் தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி.. மே 23 ரேட் நிலவரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com