சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து.. 82 பேர் உயிரிழப்பு, 9 பேர் மாயம்!

Shanxi Coal Mine Blast : வட சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில், 82 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் மாயமாகியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Published on: May 23, 2026 at 1:14 pm

பெய்ஜிங், மே 23, 2026: சீனாவின் வடக்கில் உள்ள ஷான்சி மாகாணத்தின் லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை (மே 22, 2026) இரவு பேரழிவான எரிவாயு வெடிப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் 247 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் இருந்தனர். இந்நிலையில், ஆரம்பத்தில் குறைந்த உயிரிழப்பு என தெரிவிக்கப்பட்டாலும், பின்னர் 82 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில், 9 பேர் இன்னும் காணாமல் மாயமாகியுள்ளனர், அவர்களை தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், சீன அதிபர் ஷி ஜின்பிங், மீட்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், “காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் எந்த முயற்சியையும் விட்டுவிட வேண்டாம்” என்று வலியுறுத்தினார். தொடர்ந்து, விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தவும், பொறுப்புக்கூறியவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சீனப் பிரதமர் லி கியாங், அதிகாரிகள் வெளிப்படையான தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும், கடுமையான பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, வெடிப்புக்கான காரணம் குறித்து உள்ளூர் அவசரகால மேலாண்மை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com