Raveena Tandon : “நாய்கள் உயிருள்ள ஜீவன்கள்; அவற்றை கொல்லாதீர்கள்” என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நடிகை ரவீனா தாண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Raveena Tandon : “நாய்கள் உயிருள்ள ஜீவன்கள்; அவற்றை கொல்லாதீர்கள்” என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நடிகை ரவீனா தாண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Published on: May 23, 2026 at 1:08 pm
புதுடெல்லி, மே 23, 2026: பஞ்சாப் மாநிலத்தில் தெருநாய்கள் அகற்றும் நடவடிக்கை தொடங்கிய நிலையில், நடிகை ரவீனா தாண்டன் மாநில முதல்வர் பகவந்த் மானிடம் மனிதாபிமானமான அணுகுமுறையை கோரி மனு வைத்துள்ளார். அதில் அவர் “நாய்கள் உயிருள்ள உயிரினங்கள், அவற்றை கொல்லாமல் பாதுகாப்பான தங்குமிடங்களில் வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
ரவீனா தாண்டன் வேண்டுகோள்
நடிகை ரவீனா டாண்டன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தெருநாய்களை கொல்லாமல், பாதுகாப்பான தங்குமிடங்களில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் “நாய்கள் மனிதர்களின் நண்பர்கள், அவற்றை கொல்லாமல், பராமரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பு அவசியம் என்றாலும், மனிதாபிமானம் மறக்கப்படக்கூடாது என அவர் தெரிவித்தார்.
பகவந்த் மான் நிலைப்பாடு
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை உரிய முறையில் பின்பற்றுவோம் என்று அறிவித்துள்ளார். மேலும், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் தெருநாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
விலங்கு நல ஆர்வலர்கள்
இதற்கிடையில், விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள், மொத்தமாக கொல்லும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
மே 19, 2026 தின உச்ச நீதிமன்ற உத்தரவில், தெருநாய்களை மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இருந்து அகற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காஜல் அகர்வாலின் “தி இந்தியா ஸ்டோரி.. ரிலீஸ் தேதி அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com