அமைச்சரவையில் விசிக.. வன்னி அரசு, ஷாஜகான் அமைச்சர்களாக பதவியேற்பு!

Vanni Arasu: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் ஷாஜகான், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னிஅரசு ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

Published on: May 22, 2026 at 2:57 pm

சென்னை, மே 22 2026: தமிழக அரசியலில் சமூக நீதி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ள வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு, தமிழகத்தின் முதல் “சமூக நீதி துறை அமைச்சர்” ஆக பொறுப்பேற்றுள்ளார்.

தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, விசிக மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் விசிக சார்பில் வன்னி அரசு இடம் பெறுவார் என்று அறிவித்தார்.

இந்நிலையில், வி.சி.க. சார்பில் வன்னி அரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏ.எம். ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

சென்னை ராஜ்பவனில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேக்கர் இருவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து வன்னி அரசுக்கு “சமூக நீதி” துறை ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், தமிழக வரலாற்றில் தனித்துவமாக சமூக நீதிக்கென தனி அமைச்சரவை பொறுப்பு வழங்கப்பட்ட முதல் அமைச்சராக அவர் மாறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த அமைச்சரவைப் பொறுப்பு முக்கிய அரசியல் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்.எல்.) கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கியுள்ள முதலமைச்சர் விஜயின் நடவடிக்கை, அரசியல் ரீதியாக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அன்று ராஜாஜி.. இன்று விஜய்.. 74 வருஷத்துக்கு பின்னர்.. இப்படி ஓர் சம்பவமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com