Agarkar vs Shami Row : இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி பற்றி அஜித் அகர்கர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
Agarkar vs Shami Row : இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி பற்றி அஜித் அகர்கர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

Published on: May 21, 2026 at 11:23 am
புதுடெல்லி, மே 21, 2026: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் ஆகர்கர், மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமியை அணியில் சேர்க்காததற்கான விளக்கத்தால் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்.
அஜித் அகர்கர் தனது விளக்கத்தில், “ஷமி டி-20 கிரிக்கெட்டுக்கு மட்டுமே தயாராக உள்ளார்” என்ற அவரது கருத்து, முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களால் ‘அவமரியாதை’ என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
என்ன பேசினார் அகர்கர்?
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களில் ஒருவரான அஜித் அகர்கர், “முகம்மது ஷமியின் உடல் நிலை தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அளவுக்கு பொருத்தமாக இல்லை; அவர் டி-20-க்கு மட்டுமே தயாராக உள்ளார்”. எனத் தெரிவித்திருந்தார்.
இதனை முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர், “அபத்தம்” என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர், “முகம்மது ஷமி, சாதாரண வீரர் அல்ல. அவர் 2023 உலகக் கோப்பையில் இந்தியாவின் முன்னணி வீரராக திகழ்ந்தார். அவரை டி-20 கிரிக்கெட்டுக்கு மட்டும் பொருத்தமானவர் எனக் கூறுவது அவமரியாதை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் அடைந்தால், திரும்பி வந்தபோது அவரை இப்படியே நடத்துவீர்களா?” எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள், “ஷாமி இன்னும் திறமையானவர்; அவரை புறக்கணிப்பது தவறு” என்று கிரிக்கெட் வீரர்கள் பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : சி.எஸ்.கே இளம் வீரருக்கு தோனி கொடுத்த அட்வைஸ்.. என்ன சொன்னார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com