Gold Loan Market Boom : நாடு முழுக்க தங்கக் கடன் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது; இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Gold Loan Market Boom : நாடு முழுக்க தங்கக் கடன் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது; இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 21, 2026 at 11:07 am
சென்னை, மே 21, 2026: இந்தியாவில் தங்கக் கடன் சந்தை 2026 மார்ச் மாதம் நிலவரப்படி 50.4% அதிகரித்து ₹18.6 லட்சம் கோடி அளவுக்கு சென்றுள்ளது. இதில் தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா ஆகியவை மொத்த நிலுவையில் 75% பங்கைக் கொண்டுள்ளன.
நகைக் கடன் அதிகரிப்பு
இந்தியாவில் மொத்த தங்கக் கடன் ₹18.6 லட்சம் கோடியாக காணப்படுகிறது. இதில் அதிகளவு தங்க நகைக் கடன்கள் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி) வசம் உள்ளன. மேலும், இந்த தங்க நகைக் கடன் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக தங்க விலை உயர்வு, பாதுகாப்பான கடன் விருப்பம், அதிகரித்த நிதி தேவை ஆகியவை உள்ளன.
தமிழ்நாட்டில் தங்க நகைக் கடன்
தங்க நகைக் கடனை பொறுத்தமட்டில் தென்னிந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதாவது, ₹5.96 லட்சம் கோடி தங்க நகைக்கடன் நிலுவை உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள ஆந்திராவில் ₹3.08 லட்சம் கோடி தங்க நகைக் கடன் உள்ளது. மூன்றாம் இடமான கர்நாடகாவில் ₹1.81 லட்சம் கோடியும், நான்காம் இடத்தில் உள்ள தெலுங்கானாவில் ₹1.60 லட்சம் கோடியும் உள்ளது.
கேரளத்தை பொறுத்தமட்டில் ₹1.45 லட்சம் கோடி தங்க நகைக் கடன் உள்ளது. மற்ற மாநிலங்கள் முறையே உத்தரப் பிரதேசம் ₹42,300 கோடி, குஜராத் ₹57,100 கோடி, ராஜஸ்தான் ₹41,700 கோடி, மேற்கு வங்காளம் ₹35,000 கோடியாக காணப்படுகின்றன.
இதையும் படிங்க : இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு.. ரிசர்வ் வங்கி ஸ்வாப் ஏல நடவடிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com