இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு.. ரிசர்வ் வங்கி ஸ்வாப் ஏல நடவடிக்கை!

RBI Swap Auction : இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ரூபாய் மதிப்பை மீட்க சில நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.

Published on: May 21, 2026 at 9:27 am

புதுடெல்லி, மே 21, 2026: இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவடைந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) $5 பில்லியன் மதிப்பிலான டாலர்-ரூபாய் ஸ்வாப் ஏலத்தை மே 26, 2026 அன்று நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, நீண்டகால ரூபாய் லிக்குடிட்டியை வங்கித் துறையில் செலுத்தி, சந்தை நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான முக்கியமான தலையீடாக பார்க்கப்படுகிறது.

ஆர்.பி.ஐ முக்கிய அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்க, $5 பில்லியன் USD/INR Buy-Sell ஸ்வாப் ஏலம் மே 26, 2026 அன்று காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த ஏலத்தில் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மட்டுமே பங்குபெறுவார்கள்.

ரூபாய் சரிவு காரணங்கள்

மேற்கு ஆசியப் போர் மற்றும் எண்ணெய் விலை உயர்வு காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் இந்திய சந்தையிலிருந்து வெளியேறியுள்ளன.
இந்நிலையில், ரூபாய் தற்போது 96.82/$ என்ற வரலாற்று குறைந்த நிலையை எட்டியுள்ளது. கடந்த நிதியாண்டு FY25 முதல் ரூபாய் 13% சரிவு கண்டுள்ளது.

ஸ்வாப் ஏலம் எப்படி செயல்படும்?

வங்கிகள் அமெரிக்க டாலர்-ஐ இந்திய ரிசர்வ் வங்கிக்கு விற்று, அதற்கான ரூபாய் திரவத்தை பெறுகின்றன. இந்நிலையில், 3 ஆண்டுகள் கழித்து, ஆர்.பி.ஐ அதே அளவு டாலரை மீண்டும் வங்கிகளுக்கு விற்று, ரூபாயை திரும்பப் பெறும்.

அந்த வகையில், இந்த ஸ்வாப் ஏல நடவடிக்கை, இந்திய ரூபாயின் சரிவை கட்டுப்படுத்துவதோடு, வங்கித் துறைக்கு நீண்டகால நிதி ஆதரவு வழங்கும் முக்கியமான நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : புதிய உச்சத்தில் பருத்தி விலை.. குவிண்டால் ரூ..10,761க்கு விற்பனை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com