நீட் மறுதேர்வு.. மாணவ- மாணவியருக்கு இப்படி ஓர் வாய்ப்பா? செக் பண்ணுங்க!

NEET UG 2026 Re-exam : நாடு முழுக்க வரும் ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடைபெறுகிறது; நீட் தேர்வு மையம் தேர்ந்தெடுத்தாச்சா?

Published on: May 18, 2026 at 1:46 pm

புதுடெல்லி, மே 18, 2026: நீட் இளங்கலை 2026 தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீண்டும் நடைபெறும் இளங்கலை நீட் மறுதேர்வில் மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த தேர்வு மையத்தைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நீட் மறுதேர்வு ஏற்பாடு

இளங்கலை நீட் 2026 தேர்வில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, மறுதேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள், தங்களுக்குப் பிடித்த நகரம் அல்லது மையத்தை தேர்வு செய்யலாம். இதனால், பயண சிரமம் குறைந்து, மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அறிவிப்பு

இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “மாணவர்களின் நலனே எங்களின் முன்னுரிமை. அவர்கள் விரும்பும் மையத்தில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்படும். இது தொடர்பாக, தேர்வு மையம் தேர்வு செய்யும் வசதி விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திறக்கப்படும். மாணவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் பின்பற்ற வேண்டும்” என்றார். இதற்கிடையில் மத்திய கல்வி அமைச்சகம், தேர்வின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சி.பி.எஸ்.இ-யில் மும்மொழி கட்டாயம்.. ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com