Taj Mahal Dream : தாஜ்மஹாலை நேரில் பார்ப்பது என் கனவு என கொரிய நடிகை யேரி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியப் படங்களில் நடிக்க அவர் வாய்ப்பு கோருகிறார்.
Taj Mahal Dream : தாஜ்மஹாலை நேரில் பார்ப்பது என் கனவு என கொரிய நடிகை யேரி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியப் படங்களில் நடிக்க அவர் வாய்ப்பு கோருகிறார்.

Published on: May 18, 2026 at 10:24 am
புதுடெல்லி, மே 18, 2026: கொரியன் பாப் இசைக்குழுவான ரெட் வெல்வெட் உறுப்பினர் யேரி, இந்திய திரைப்படங்களின் தனித்துவம் அவரை கவர்ந்துள்ளதாகவும், ஒருநாள் தாஜ்மகாலை நேரில் பார்ப்பது தனது கனவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் பாலிவுட் வாய்ப்புகளையும் ஆர்வமாக எதிர்நோக்குகிறார்.
இந்தியப் படங்கள் குறித்து யேரி
இந்தியப் படங்கள் குறித்து யேரி கூறுகையில், இந்திய திரைப்படங்கள் இசை மற்றும் கதை சொல்லலை தனித்துவமாக இணைக்கும் விதம் என்னை வெகுவாக கவர்ந்தது. நான் எப்போதும் புதிய சவால்களுக்கு தயாராக இருக்கிறேன். இந்திய உள்ளடக்கம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது” என்றார். மேலும், பாலிவுட் வாய்ப்புகள் கிடைத்தால் ஆர்வமாக பங்கேற்க விருப்பம் தெரிவித்தார்.
தாஜ்மஹால் கனவு
கொரிய நடிகை யேரி இதுவரை இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால், தாஜ்மகாலை நேரில் பார்ப்பது தனது கனவு என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இந்திய கலாச்சாரம் மற்றும் கலை வடிவங்கள் அவரை ஈர்க்கின்றன என்று கூறினார். யேரி தற்போது “Azure Springs” என்ற கொரியன் டிராமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : செலவு குறைகிறது அவதார்.. புதிய தொழில்நுட்பம் ஆய்வு.. ஜேம்ஸ் கேமரூன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com