Eva Marie Saint passed away: ஹாலிவுட் நடிகையும் ஆஸ்கர் விருது வென்றவருமான ஈவா மேரி செயின்ட் தனது 102-வது வயதில் காலமானார்.
Eva Marie Saint passed away: ஹாலிவுட் நடிகையும் ஆஸ்கர் விருது வென்றவருமான ஈவா மேரி செயின்ட் தனது 102-வது வயதில் காலமானார்.

Published on: October 7, 2026 at 1:46 pm
லாஸ் ஏஞ்சல்ஸ், அக்.7, 2026: ஹாலிவுட் நடிகையும் ஆஸ்கர் விருது வென்றவருமான ஈவா மேரி செயின்ட் தனது 102-வது வயதில் காலமானார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி இயற்கை காரணங்களால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சூழ்ந்திருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
1954-ஆம் ஆண்டு எலியா கசான் இயக்கிய ஆன் தி வாட்டர்பிராண்ட் (On the Waterfront) திரைப்படத்தின் மூலம் ஈவா மேரி செயின்ட் திரையுலகில் அறிமுகமானார். இதில் மார்லன் பிராண்டோவுடன் இணைந்து நடித்த அவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. தொடர்ந்து, எக்ஸோடஸ் (Exodus), கிராண்ட் பிரிக்ஸ் (Grand Prix), தி ரஷ்யன்ஸ் ஆர் கம்மிங் (The Russians Are Coming) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய 1959-ஆம் ஆண்டு வெளியான நார்த் பை நார்த்வெஸ்ட் (North by Northwest) திரைப்படத்தில் கேரி கிராண்டுக்கு ஜோடியாக ஈவ் கெண்டல் கதாபாத்திரத்தில் நடித்தது அவரது திரையுலக வாழ்க்கையின் முக்கியமான படைப்பாக அமைந்தது.
திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சியிலும் நீண்ட காலம் பணியாற்றிய அவர், 1990-ஆம் ஆண்டு பீப்பிள் லைக் அஸ் தொலைக்காட்சி திரைப்படத்திற்காக எம்மி விருதையும் வென்றார். ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது கலைப்பயணம், ஹாலிவுட்டின் பொற்காலத்தின் குறிப்பிடத்தக்க அத்தியாயமாக நினைவுகூரப்படுகிறது.
இதையும் படிங்க : விஜய் வழியில் தனுஷ்? வித்யா ராமராஜூக்கு நேரில் பாராட்டு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com