விஜய் வழியில் தனுஷ்? வித்யா ராமராஜூக்கு நேரில் பாராட்டு!

Dhanush: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Published on: October 7, 2026 at 1:19 pm

சென்னை, அக்.7, 2026: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா, மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

இதன்மூலம் ஒரே ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3 பதக்கங்களை வென்றதுடன், 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்திலும் வித்யா வரலாற்றுச் சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் 54.75 வினாடிகளில் இலக்கை கடந்து, நீண்ட காலமாக நிலவி வந்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் தேசிய சாதனையையும் அவர் முறியடித்தார்.

வித்யா ராம்ராஜின் சர்வதேச சாதனைகளைப் பாராட்டிய நடிகர் தனுஷ், அவரை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், தொடர்ந்து நடைபெறும் விளையாட்டு வாழ்க்கையிலும் அவர் சிறப்பான வெற்றிகளைப் பெற வேண்டும் என தனுஷ் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத் தலைவர் எம். செண்பகமூர்த்தியும் உடனிருந்தார்.

இதையும் படிங்க : தந்தையாக பிரகாஷ் ராஜ், மகனாக டார்லிங் கிருஷ்ணா.. ‘ஃபாதர்’ வெளியீடு எப்போது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com