இத்தாலியன் ஓபன் மகளிர் டென்னிஸ்.. பட்டம் வென்ற உக்ரைன் அழகுப் புயல்!

Italian Open Title : உக்ரைனின் எலினா ஸ்விடோலினா இத்தாலிய ஓபன் மகளிர் பட்டத்தை வென்றார்.

Published on: May 17, 2026 at 5:20 pm

ரோம், மே 17, 2026: உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, 2026 இத்தாலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். அவர் அமெரிக்காவின் கோகோ காஃப்பை 6-4, 6-7(3), 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி, தனது மூன்றாவது ரோம் பட்டத்தையும் கைப்பற்றினார்.

இறுதிப்போட்டி விவரங்கள்

இறுதிப்போட்டியில், ஸ்விடோலினா மற்றும் காஃப் இடையே நடந்த போட்டி 2 மணி 48 நிமிடங்கள் நீடித்தது. இதில், முதல் செட்டில் ஸ்விடோலினா 6-4 என வெற்றி பெற்றார். இந்நிலையில், இரண்டாவது செட்டில் காஃப் கடுமையாக போராடி 7-6(3) என வென்றார். தொடர்ந்து, மூன்றாவது செட்டில் ஸ்விடோலினா 6-2 என வெற்றி பெற்று பட்டத்தை உறுதி செய்தார்.

ஸ்விடோலினாவை பொறுத்தமட்டில் பிரஞ்ச் ஓபனில் முன்னணி சவாலாளராக கருதப்படுகிறார். மேலும், மூன்றாவது ரோம் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு 2017, 2018-ஆம் ஆண்டுகளில் வெற்றிப் பெற்றிருந்தார். இதன் பிறகு 2026-இல் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இத்தாலியன் ஓபன் 2026.. ஜானிக் சின்னர் இறுதிப் போட்டிக்கு தகுதி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com