4 குழந்தை பெத்துகிட்டா பணம்.. அண்டை மாநில அரசு அறிவிப்பு!

Population Push in Andhra : தம்பதியர் 2 முதல் 4 குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டால் பண உதவி வழங்கப்படும் என ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.

Published on: May 17, 2026 at 4:35 pm

அமராவதி, மே 17, 2026: ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், மூன்றாவது குழந்தைக்கு ₹30,000, நான்காவது குழந்தைக்கு ₹40,000 பண ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், ஊட்டச்சத்து உதவி மற்றும் இலவசக் கல்வி போன்ற நலன்களும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் வரவேற்பையும்- விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

அரசின் அறிவிப்பு விவரங்கள்

தம்பதியர் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் உடனடி ₹30,000 பண உதவி வழங்கப்படும்.
அதேதம்பதியர் நான்காவது குழந்தை பெற்றுக்கொண்டால் ₹40,000 பண உதவி வழங்கப்படும்.
முன்னதாக, இரண்டாவது குழந்தைக்கு ₹25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல், மூன்றாவது குழந்தைக்கு மாதம் ₹1,000 என முதல் ஐந்து ஆண்டுகள் ஊட்டச்சத்து உதவிகள் வழங்கப்படும். மேலும், 18 வயது வரை மூன்றாவது குழந்தைக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு விகிதம் குறைவு

ஆந்திர மாநிலத்தில் வருமானம் அதிகரிப்பதால் பல குடும்பங்கள் ஒரு குழந்தை மட்டுமே பெற விரும்புகின்றன. இந்நிலையில், சிலர் இரண்டாவது குழந்தை பெறுவது, முதல் குழந்தை ஆண் இல்லாதபோது மட்டுமே நிகழ்கிறது. இதனால் இதுபோன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவும்-எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 500 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்.. யார் இந்த ஜோதி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com