Vodafone Idea Q4FY26: வோடபோன் ஐடியா நிறுவனத்தின் லாபம் 3 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது. நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் குறித்து பார்க்கலாம்.
Vodafone Idea Q4FY26: வோடபோன் ஐடியா நிறுவனத்தின் லாபம் 3 சதவீதம் வரை உயர்வை கண்டுள்ளது. நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் குறித்து பார்க்கலாம்.

Published on: May 17, 2026 at 4:45 pm
மும்பை, மே 17, 2026: வோடாபோன் ஐடியா (வி.ஐ) 2026 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் (FYQ4 2026) வரலாற்றிலேயே மிகப்பெரிய ₹51,970 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஏ.ஜி.ஆர் மீளாய்வின் காரணமாக ஏற்பட்ட ஒருமுறை கணக்கியல் நன்மையால் சாத்தியமானது. வருவாய் 3% உயர்ந்து ₹11,332 கோடியாக உள்ளது.
நிறுவனத்தின் லாபம்
ஏ.ஜி.ஆர் மீளாய்வு காரணமாக, நிறுவனத்தின் கடன் பொறுப்புகள் குறைக்கப்பட்டன. இதனால், ₹87,695 கோடி என இருந்த ஏ.ஜி.ஆர் நிலுவை, மறுபரிசீலனையால் ₹64,046 கோடியாக குறைக்கப்பட்டது.
இதன் விளைவாக ₹55,622 கோடி அளவிலான ஒருமுறை கணக்கியல் நன்மை வோடபோன் ஐடியாவுக்கு கிடைத்தது.
இந்த நிலையில், நிறுவனத்தின் வருவாய் ₹11,332 கோடி, வருடாந்திர அடிப்படையில் 3% உயர்வு கண்டுள்ளது. மேலும், 4G/5G சந்தாதாரர்கள் 128.9 மில்லியன் ஆக உள்ளனர். இது, கடந்த ஆண்டின் 126.4 மில்லியனில் இருந்து உயர்வு ஆகும். இதையடுத்து தற்போது, நிறுவனத்தின் நிகர மதிப்பு -₹35,758 கோடி என எதிர்மறை நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நாடு முழுக்க மின்சார வாகன சார்ஜிங் வசதி.. ரூ.503 கோடி முதலீடு.. மத்திய அரசு அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com