Vodafone Recharge | வோடபோன் நெட்வொர்க் ரூ.719 திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
Vodafone Recharge | வோடபோன் நெட்வொர்க் ரூ.719 திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on: November 6, 2024 at 3:24 pm
Vodafone Recharge | இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களும் தங்கள் மொபைல் கட்டணத்தை சராசரியாக 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலையேற்றத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே உள்ள மற்ற சில திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.
வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம் ரூ.719 ஆக இருந்தது. இது சமீபத்திய மாற்றங்களைத் தொடர்ந்து ரூ.859 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஜியோ, ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வோடபோன் இப்போது ரூ.719க்கு மீண்டும் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தைப் பற்றிய முக்கிய விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ரூ. 719 ரீசார்ஜ் திட்டம்
வோடபோனின் ரூ.719-க்கான ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க டேட்டா வரம்பை அடைந்தபிறகு வேகம் 64 Kbps ஆகக் குறைக்கப்படுகிறது. முன்னதாக, ரூ.719 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 1.5ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் மற்றும் விஐ ஹீரோ (Vi Hero) அன்லிமிடெட் நன்மைகளை வழங்கியது.
தற்போது ரூ.719 திட்டத்தில் விஐ ஹீரோ அன்லிமிடெட் பலன்கள் வழங்கப்படவில்லை. மாறாக, ரூ.859 திட்டம் கூடுதல் 12 நாட்கள் செல்லுபடியாகும், அதிக தினசரி டேட்டா அலவன்ஸ் மற்றும் விஐ ஹீரோ அன்லிமிடெட் சேவையையும் வழங்குகிறது. இரண்டு திட்டங்களுக்கு இடையேயான ரூ.140 விலை வித்தியாசம், ரூ.859 திட்டத்தில் கூடுதலாக வழங்கப்படும் சேவையால் மாறுபடுகிறது.
இதற்கிடையில், வோடபோன் ஐடியா அதன் 5G சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சேவை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. மேலும், முதலில் டெல்லி மற்றும் மும்பையில் கிடைக்கும் என்றும் தொடர்ந்து மற்ற முக்கிய நகரங்களில் கிடைக்கும் என்றும் அந்நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஜக்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க 365 நாள் வேலிடிட்டி; ரூ.3,599: ஏர்டெல் திட்டத்தின் பயன்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com