Actor Muthukalai : நடிகர் முத்துக்காளையின் மனைவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் விஜய் உதவியுள்ளார்.
Actor Muthukalai : நடிகர் முத்துக்காளையின் மனைவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் விஜய் உதவியுள்ளார்.

Published on: May 17, 2026 at 12:22 pm
சென்னை, மே 16 2026: நடிகர் முத்துக்காளையின் மனைவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு உடனடி உயர்சிகிச்சை வழங்க வேண்டும் என நடிகர் முத்துக்காளை முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை அறிந்த முதலமைச்சர் விஜய் உடனடியாக, அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச செய்துள்ளார். மேலும் மருத்துவ உதவிகளை விரைந்து ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் ராஜ் மோகனை நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பி, நடிகர் முத்துக்காளையின் மனைவியின் உடல்நிலையை நேரில் விசாரிக்கவும், தேவையான அனைத்து உயர் சிகிச்சைகளும் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தினார்.
முதல்வரின் இந்த உடனடி நடவடிக்கைக்கு நடிகர் முத்துக்காளை மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க விஜய் முதல்வராக தடுத்தேனா; அதிமுக திமுகவை இணைக்க திட்டமிட்டேனா? ரஜினிகாந்த் விளக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com