Rajinikanth : எம்ஜிஆர் என் டி ஆர் ஐ விடவும் மிகப்பெரிய வெற்றியை விஜய் பெற்றுள்ளார்; என் 40 ஆண்டு கால நண்பர் மு க ஸ்டாலின். அவரின் தோல்வி எனக்கு சங்கடத்தை கொடுத்தது என ரஜினிகாந்த் கூறினார்.
Rajinikanth : எம்ஜிஆர் என் டி ஆர் ஐ விடவும் மிகப்பெரிய வெற்றியை விஜய் பெற்றுள்ளார்; என் 40 ஆண்டு கால நண்பர் மு க ஸ்டாலின். அவரின் தோல்வி எனக்கு சங்கடத்தை கொடுத்தது என ரஜினிகாந்த் கூறினார்.

Published on: May 17, 2026 at 12:11 pm
Updated on: May 17, 2026 at 1:28 pm
சென்னை, மே 17 2026: திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்விடையடைந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரை நேரில் சந்தித்தார். இதுகுறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில் சென்னை கொளத்தூரில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்தாவது, ஸ்டாலினுக்கும் எனக்கும் இடையில் நாற்பது ஆண்டுகால நட்பு உள்ளது. அரசியலைக் கடந்த நட்பு அது. திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றது எனக்கு சங்கடத்தைக் கொடுத்தது. அதனால் நண்பன் என்கிற முறையில் சந்தித்தேன்.
அதற்குள் விஜய் முதல்வராவதை தடுப்பதற்காக ரஜினிகாந்த் ஸ்டாலினை சந்தித்ததாக செய்திகள் வருகிறது. இரண்டு கட்சிகளை சேர்ப்பதற்காக பேசுகிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். திமுக-அதிமுக கூட்டணிக்கு நான் முயற்சிக்கவில்லை. அப்படி பேச ரஜினிகாந்த் ஒன்றும் தரம்கெட்ட ஆள் இல்லை, அதனை தெளிவுபடுத்துகிறேன்.
விஜய்யை சந்திக்கவில்லை என்று கிளப்பி விடுகிறார்கள். முதல்வர் விஜய் வெற்றி பெற்றதும் அவருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தேன். வெறும் சம்பிரதாயத்துக்காக விஜய்யை சந்திக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்க வேண்டும் என ஜெயலலிதா விருப்பம் தெரிவித்ததால் பங்கேற்றேன். கலைஞர் முதல்வரான பின் அழைத்ததால் சந்தித்தேன்.
விஜய் மீது எனக்கு பொறாமை என்று விமர்சனம் வருகிறது. அரசியலிலேயே நான் இல்லாதபோது அவர்மேல் எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது. கமல்ஹாசன் முதலமைச்சர் ஆகியிருந்தால்கூட எனக்கு பொறாமை வந்திருக்குமோ.. என்னவோ? அப்போதுகூட வந்திருக்காது. நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வென்றிருப்பேன்.
எனக்கும் விஜய்க்கும் ஜெனரேஸன் கேப் இருக்கிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டு கால இடைவெளி இருக்கிறது. நானோ விஜய்யோ ஒப்பிட்டுக்கொண்டால் அது இருவருக்கும் நல்லதல்ல. விஜயை சிறு வயதில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவரைப் பார்த்து எனக்கு என்ன பொறாமை? என்டிஆர், எம்ஜிஆர் சாதனைகளைகூட விஜய் முந்திவிட்டார்
மத்தியில் பாஜக, மாநிலத்தில் இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் சினிமாத்துறையில் இருந்து வந்து வெற்றி பெற்றுள்ளார். அதில் எனக்கு பொறாமை இல்லை. ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தைத்தான் கொடுத்தது.
மக்கள் மத்தியில் விஜய் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை அவர் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. விஜய்யின் தொண்டர்கள் ரசிகர்கள் சிறு தவறுகள் செய்தால் கூட அது விஜய்யை பாதிக்கும் என்பதை அவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க முதலமைச்சர் விஜய் உட்பட யார் யாருக்கு என்ன துறை? தமிழக அமைச்சரவை முழு லிஸ்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com