விஜய் செய்தியாளர் சந்திப்பு கட்டாயம் இல்லை.. அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்

C.T. Nirmal Kumar : விஜய் செய்தியாளர் சந்திப்பு கட்டாயம் இல்லை எனவும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Published on: May 16, 2026 at 5:51 pm

மதுரை, மே 16, 2026: தமிழக அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் இன்று (சனிக்கிழமை) மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதுரையில் சட்டவிரோத கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் பேசிய அவர், ‘மதுரை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் குவாரிகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜயின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் அனைத்தும் சீரமைக்கப்பட்டு சரியான பாதையில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது; பொதுமக்களும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். முதலமைச்சர் விஜய், ஒவ்வொரு நாளும் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு, காலை முதல் மாலை வரை தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார்” என்றார்.

விஜய் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பதிலளித்தார். அப்போது, ‘அரசு சார்பாக தினமும் செய்தி அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன என்பதால், முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்க வேண்டியது கட்டாயம் இல்லை என அவர் கூறினார்.

இதையும் படிங்க :ஈழத் தமிழர்களுக்காக முதல்வர் விஜய் குரல் கொடுக்க வேண்டும்.. இலங்கை எம்.பி ராமநாதன்!

கர்நாடக முதல்வரை பார்த்து பயமா? தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட தாய்மாமா? எடப்பாடி பழனிச்சாமி! Edappadi Palaniswami

கர்நாடக முதல்வரை பார்த்து பயமா? தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட தாய்மாமா? எடப்பாடி பழனிச்சாமி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com