NEET Exam : அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜூன் 21ஆம் தேதி, நீட் மறு தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் பிரதான் தெரிவித்துள்ளார்.
NEET Exam : அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஜூன் 21ஆம் தேதி, நீட் மறு தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் பிரதான் தெரிவித்துள்ளார்.

Published on: May 15, 2026 at 7:05 pm
புதுடெல்லி, மே 15, 2026; நீட் (இளங்கலை) 2026 தேர்வு மீண்டும் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஜூன் 21, 2026 அன்று புதிய தேதியில் தேர்வு நடைபெறும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி செய்துள்ளார். தேர்வின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்
அதன்படி, நீட் (இளங்கலை) 2026 தேர்வு, சில தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக ஜூன் 21, 2026 ஆம் தேதி மீண்டும் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை, மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது
முன்னதாக இது குறித்து பேசிய தர்மேந்திர பிரதான்: “மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். தேர்வு முறையில் நியாயமும் வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படும்” என்றா மேலும், “மாணவர்கள் எந்த வித அச்சமும் கொள்ள வேண்டாம். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்
இதையும் படிங்க : ஆன்லைன் மூலம் நீட் தேர்வு.. OMR பேப்பர் இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com