Jamie Overton Injured : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
Jamie Overton Injured : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

Published on: May 15, 2026 at 6:13 pm
சென்னை, மே 15, 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரபல வெளிநாட்டு வீரர் ஜேமி ஓவர்டன் காயம் காரணமாக வெளியேறியுள்ளார். இந்நிலையில், தென்னாப்பிரிக்க ஆல்-ரௌண்டர் டியான் ஃபோரெஸ்டர் மாற்று வீரராக இணைக்கப்பட்டுள்ளார். அவர் ₹75 லட்சம் மதிப்பில் சி.எஸ்.கே அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜேமி ஓவர்டன் காயம்
பிரபல கிரிக்கெட் வீரரான ஜேமி ஓவர்டன், வலது தொடை காயம் காரணமாக ஐ.பி.எல் 2026 தொடரில் இருந்து முழுவதும் விலகினார். இவர் சி.எஸ்.கே அணியில், 10 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட் மற்றும் 136 ரன்கள் எடுத்து இருந்தார். இந்த நிலையில் ஜேமி, மருத்துவ பரிசோதனைக்காக இங்கிலாந்து திரும்பியுள்ளார். இதற்கிடையில், மாற்று வீரரான டியான் ஃபோரெஸ்டரை பொறுத்தவரை இடதுகை பேட்ஸ்மேன், வலதுகை பந்துவீச்சாளர் ஆவார். இவர், மார்ச் 2026, நியூசிலாந்து எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.
இந்நிலையில், ஓவர்டன் வெளியேறியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆல்-ரௌண்டர் இடைவெளி உருவாகியுள்ளது. மேலும், சி.எஸ்.கே அணியை பொறுத்தவரை பிளேஆஃப் வாய்ப்பு இன்னும் உள்ளது; புதிய சேர்க்கை அணியின் வலிமையை அதிகரிக்க உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : மேட்ச் பிக்ஸிங்.. உங்களை யாராவது தொடர்பு கொண்டார்களா? ராகுல், சச்சினிடம் நேரில் கேட்ட கங்குலி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com