Kerala CM Race: கேரள காங்கிரஸில் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்தப் போட்டியில் கே.சி. வேணுகோபால் முந்துகிறார். அவருக்கு 63 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 47 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.
Kerala CM Race: கேரள காங்கிரஸில் முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்தப் போட்டியில் கே.சி. வேணுகோபால் முந்துகிறார். அவருக்கு 63 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 47 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

Published on: May 8, 2026 at 3:29 pm
திருவனந்தபுரம், மே 8, 2026: கேரளாவில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுவில் 63 எம்.எல்.ஏ.க்களில் 47 பேர் கே.சி. வேணுகோபாலின் பெயரை முதல்வர் பதவிக்காக பரிந்துரைத்துள்ளனர். இதனால் அவர் போட்டியில் முன்னிலை பெற்றுள்ளார்.
கேரளா காங்கிரஸ் சட்டமன்றக் குழு
கேரளத்தில் வெற்றிப் பெற்ற 63 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 47 பேர் கே.சி. வேணுகோபாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில், 8 எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் சென்னித்தலாவை ஆதரித்துள்ளனர். மேலும், 6 எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசனை ஆதரித்துள்ளனர்.
இதில், கே.சி. வேணுகோபால் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் ஆவார். அதேநேரம், வி.டி. சதீசன், கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்; கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என பலர் கருதுகின்றனர். ரமேஷ் சென்னித்தலாவை பொறுத்தவரை, மூத்த தலைவர்; அனுபவம் வாய்ந்தவராக கருதப்படுகிறார்.
இந்த நிலையில், மே 10ஆம் தேதிக்குள் புதிய முதல்வர் பெயர் அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது; அறிவிப்புக்குப் பிறகு இரண்டு நாட்களுக்குள் பதவியேற்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கேரளத்தில் யார் CM? காங்கிரஸ் வேணுகோபால், சதீசன் தரப்பு தீவிரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com