பாலியல் வன்கொடுமை.. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

Crimes against Women: டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு அதிகரித்துள்ளன.

Published on: May 8, 2026 at 3:34 pm

புதுடெல்லி, மே 8, 2026: தேசிய குற்றப் பதிவுகள் புள்ளிவிவரப்படி, டெல்லி நகரம், இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடத்தில் உள்ளது. பாலியல் பலாத்காரம், குடும்ப வன்முறை, வேலை இடங்களில் தொந்தரவு, மற்றும் புதுப்பெண் தற்கொலைகள் மற்றும் கொலைகள் போன்ற வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த புள்ளிவிவரங்கள், பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்புகின்றன. பெண்கள் பாதுகாப்பு அமைப்புகள், “சட்டம் கடுமையாக இருந்தாலும், நடைமுறையில் பல குறைகள் உள்ளன” என்று கூறுகின்றன.

இதற்கிடையில், டெல்லி போலீசார், பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க சிறப்பு பிரிவுகள், ஹெல்ப்லைன் எண்கள், மற்றும் விரைவான விசாரணை குழுக்கள் அமைத்துள்ளனர். ஆனால், சமூக விழிப்புணர்வு இல்லாமல், குற்றங்களை முற்றிலும் தடுக்க முடியாது என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

டெல்லியில் குற்றங்கள் அதிகரிப்பு

‘இந்தியாவில் குற்றம் 2024′ என்ற அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 13,396 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 1,058 பாலியல் வன்கொடுமை வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன.பாலியல் வன்கொடுமையுடன் கூடிய கொலை/கூட்டுப் பாலியல் வன்கொடுமை’ என்ற பிரிவிலும் இதே போன்ற நிலை காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் 316 ஆகப் பதிவாகியுள்ளன, இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும். டெல்லியைத் தொடர்ந்து மும்பையில் 2024-ஆம் ஆண்டில் 286 வழக்குகளும், பெங்களூருவில் 180 வழக்குகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாட்டை உலுக்கிய பாலியல் வழக்கு.. 42 நாள் தேடலுக்கு பின் நிதா கான் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com