40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய கும்பல்.. மே 4ல் விடுதலை.. த.வெ.க நிர்மல் குமார்!

TN Poll Results May 4 : 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய கும்பலிடம் இருந்து மே 4ஆம் தேதி விடுதலை கிடைக்கும் என த.வெ.க நிர்வாகி சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Published on: April 26, 2026 at 12:26 pm

சென்னை, ஏப்.26, 2026: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக இணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய கும்பலிடம் இருந்து மே 4ஆம் தேதி விடுதலை கிடைக்கும் என்றார்.

பேருந்து வசதி தடை

தொடர்ந்துப் பேசிய நிர்மல் குமார், “தேர்தல் நடைபெறும் காலத்தில், பேருந்து வசதி வேண்டுமென்றே தடை செய்யப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில அதிகாரிகளின் நடவடிக்கையால், பெரும்பாலான இடங்களில் போக்குவரத்துத் துறை பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

குறைந்தபட்சம் 20 லட்சம் பேர் வாக்களிக்க விடாமல் செய்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாது; அவர்களுக்கு பின்னணியாகச் செயல்பட்ட அதிகாரிகள்தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

40 ஆண்டுகாலம் ஏமாற்றிய கும்பல்

மேலும், மக்கள் 40 ஆண்டுகளாக ஏமாற்றிய கும்பலிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என வாக்களித்துள்ளனர்; மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்” என்றார்.

இதையும் படிங்க : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அவர்கள் ஏன் விலகினார்கள்? அன்னா ஹசாரே


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com