ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அவர்கள் ஏன் விலகினார்கள்? அன்னா ஹசாரே

Anna Hazare Blames AAP : “கட்சி சரியான திசையில் சென்றிருந்தால், அவர்கள் கட்சியை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்” என மூத்த சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

Published on: April 25, 2026 at 10:18 pm

அகில்யாநகர், ஏப்.25, 2026: “ஆம் ஆத்மி கட்சி சரியான திசையில் சென்றிருந்தால், அவர்கள் கட்சியை விட்டு விலகியிருக்க மாட்டார்கள்” என மூத்த சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

மூத்த சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே வெள்ளிக்கிழமை (ஏப்.24, 2026) மகாராஷ்டிரா மாநிலத்தின் அகில்யாநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஜனநாயகத்தில் ஒவ்வொரு நபருக்கும் அரசியல் முடிவுகளை எடுக்க உரிமை உண்டு; தலைவர்கள் ஏன் விலகுகிறார்கள் என்பதை கட்சித் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.

அன்னா ஹசாரே செய்தியாளர் சந்திப்பு

ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் கருத்து உரிமை உண்டு. அவர்கள் ஏதோ சிரமத்தை சந்தித்திருப்பார்கள்; அதனால் தான் விலகியிருக்கிறார்கள்.
இது ஆம் ஆத்மி கட்சி தலைமையின் தவறு; அந்தக் கட்சி சரியான பாதையைப் பின்பற்றியிருந்தால், அவர்கள் விலகியிருக்க மாட்டார்கள்” என்றார்.

மேலும், “ஒரு கட்சியை விட்டு விலகும் அரசியல் முடிவின் பின்னால் எப்போதும் காரணங்கள் இருக்கும், அவை ஜனநாயகத்தின் பரந்த சூழலில் பார்க்கப்பட வேண்டும் எனவும் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

2011 ஊழல் எதிர்ப்பு போராட்டம்

2011 ஆம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் போது ஹசாரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் நெருக்கமாக இணைந்திருந்தனர்.
அப்போது, கெஜ்ரிவால், டெல்லியில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதங்களில் அன்னா ஹசாரேவுடன் இணைந்து பணியாற்றினார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : பா.ஜ.க.வில் இணையும் ஹர்பஜன் சிங்? பரபரப்பு தகவல்கள்!


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com