ராஜஸ்தான் vs ஹைதராபாத்.. வைபவ் சூர்யவன்சி அதிரடி சதம்!

Rajasthan vs Hyderabad : இந்திய பிரீமியர் லீக் போட்டியில், ராஜஸ்தான் அணியின் வீரர் வைபவ் சூர்யவன்சி அதிரடி சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Published on: April 25, 2026 at 10:14 pm

ஜெய்ப்பூர், ஏப்.25, 2026: ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோதிய இன்றைய ஆட்டம், ஜெய்ப்பூரின் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்சி ஆகியோர் களம் இறங்கினார்கள்.

இந்நிலையில், ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து, ஜுரெல் களம் கண்டார். இந்நிலையில், அதிரடி காட்டிய சூர்யவன்சி, 15 பந்தில் 50 ரன் எடுத்தார். இந்நிலையில் மறுமுனையில் மிரட்டிய சூர்யவன்சி, 15 பந்தில் அரைசதம் அடித்தார்.
இதற்கிடையில் ஜுரெலும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். இந்த நிலையில், தொடர் அதிரடி காட்டிய சூர்யவன்சி, 36 பந்துகளில் சதம் அடித்தார்.

தொடர்ந்து, ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் அணிக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. சூர்யவன்சியின் சதம், அணியின் இன்னிங்ஸை உயர்த்திய முக்கிய காரணமாக அமைந்தது.
ஹைதராபாத் அணி, இந்த இலக்கை அடைய வலுவான ஆட்டம் காட்ட வேண்டியுள்ளது. இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதரபாத் பேட்டிங்

இந்த நிலையில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 1 விக்கெட் இழப்புக்கு 2 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்துள்ளது. 17.5 ஓவர்களில் 199 ரன்கள் வெற்றிக்கு தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன. ஹைதராபாத் தொடர்ந்து விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : 3 போட்டிகளில் தொடர் தோல்வி.. இன்று 4வது ஆட்டம்.. இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com