Annamalai in Thisaiyanvilai: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை திசையன்விளையில் பரப்புரை மேற்கொள்கிறார்.
Annamalai in Thisaiyanvilai: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை திசையன்விளையில் பரப்புரை மேற்கொள்கிறார்.

Published on: April 15, 2026 at 12:22 pm
திருநெல்வேலி ஏப்ரல் 15, 2026; தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக, திமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இழந்த ஆட்சியை மீட்க அதிமுகவும் ஆட்சியை தக்க வைக்க திமுகவும் போராடி வருகின்றன; இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியை பொருத்தம்பட்டில் இங்கு சபாநாயகர் அப்பாவு, திமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எஸ்.பி பாலகிருஷ்ணன் என்பவர் போட்டியிடுகிறார். எஸ் பி பாலகிருஷ்ணனுக்கு, கூட்டணி கட்சியான அதிமுகவிலும் மற்ற கட்சிகளிலும் நல்ல ஒத்துழைப்பு காணப்படுகிறது.
மேலும் அவருக்கு ஆதரவாக உள்ளூர் அமைப்புகளும் துணை நிற்கின்றன; திமுக வேட்பாளர் சபாநாயகர் அப்பாவு-வை பொருத்தமட்டில், தொகுதி மக்களோடு நெருங்கி பழகும் நபர் ஆவார்.
அந்த வகையில் இருவருக்குள்ளும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் 13ம் தேதி திசையன்விளை பகுதியில், திமுக வேட்பாளர் அப்பாவு-வை ஆதரித்து, திமுக எம்பி கனிமொழி பரப்புரையாற்றினார்.
இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 15), பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எஸ்பி பால கிருஷ்ணனை ஆதரித்து, அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க; 1950களில் பார்த்த தி.மு.க.வை பார்க்க வேண்டியிருக்கும்.. மு.க ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com