1950களில் பார்த்த தி.மு.க.வை பார்க்க வேண்டியிருக்கும்.. மு.க ஸ்டாலின் பரபரப்பு வீடியோ!

Stalin Threatens Anti-Delimitation Stir: தமிழ்நாடு கடைசி எச்சரிக்கை என்ற தலைப்பில் மு.க ஸ்டாலின் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Published on: April 14, 2026 at 6:39 pm

Updated on: April 14, 2026 at 6:40 pm

சென்னை, ஏப்.14, 2026: தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்பட்டால், தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்போம் என மத்திய அரசுக்கு மு.க ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின் பரபரப்பு வீடியோ

தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க ஸ்டாலின் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், “மாநிலத்தின் நலன்கள் பாதிக்கப்பட்டாலோ அல்லது தென்னிந்திய மாநிலங்கள் அளவுக்கு அதிகமாகப் பாதிக்கப்பட்டாலோ, தமிழ்நாடு ஒரு மாபெரும் போராட்டத்தைத் தொடங்கும்” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல்கள் நடைபெற்று வரும் வேளையில் இந்த சிறப்புக் கூட்டம் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது எனவும் மு.க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

மேலும், “ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இதற்கு எதிராகத் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களின் முதலமைச்சர்களையும், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து, சென்னையில் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தை நடத்தினோம்” எனவும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாரி சக்தி வந்தன் அதினியம், 2023-இல் திருத்தங்கள் செய்வது குறித்தும், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா குறித்தும் விவாதிப்பதற்காக ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளன. இது தொடர்பான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையில் மு.க ஸ்டாலின், “1950-60களில் பார்தத பழைய தி.மு.க.வை இந்தியா திரும்பவும் பார்க்க வேண்டி இருக்கும். நான் எச்சரிக்கிறேன். இதனை மிரட்டல் என நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம்பட்சம்தான்” எனவும் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அம்பேத்கர் பாதுகாத்த அரசியல் உரிமையை காப்போம்.. மல்லிகார்ஜூன கார்கே!

ஐபிஎல் போட்டி பார்த்தபோது விபத்து… பாரம் தாங்காமல் சரிந்த மேற்கூரை..வெளி மாநில தொழிலாளி உயிரிழப்பு Nandambakkam accident

ஐபிஎல் போட்டி பார்த்தபோது விபத்து… பாரம் தாங்காமல் சரிந்த மேற்கூரை..வெளி மாநில தொழிலாளி


திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com