வேங்கைவயல், மது விலக்கு.. வி.சி.க. நிலைபாடு என்ன? தொல். திருமாவளவன் பதில்!

Thol. Thirumavalavan : வி.சி.க தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லையை என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பதிலளித்துள்ளார்.

Published on: April 13, 2026 at 5:25 pm

சென்னை, ஏப்.13, 2026: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கு இடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். மது விலக்கு குறித்து கேள்விக்கு, “நாங்கள் தற்போது தேர்தல் அறிக்கையைத் திருத்தி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் சில புதிய திட்டங்களைச் சேர்த்து, திருத்தப்பட்ட தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயப் பேரழிவுக்குப் பிறகு, மதுவிலக்கு குறித்த ஒரு மாநாட்டை விசிக நடத்தி இருந்தது. எனினும் இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் வி.சி.க. தேர்தல் அறிக்கையில் இல்லை. முன்னதாக, வேங்கைவயல் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அவர்களின் கோரிக்கைகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம். நீதி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், எங்கள் கூட்டணியில் உள்ள மற்ற அனைத்துக் கட்சிகளும் அம்மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்.23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: கொளத்தூரில் கமல்ஹாசன் பரப்புரை.. விஜயின் பெரம்பூர் டார்கெட்.. எப்போது தெரியுமா?

என் தந்தையைப் போல் தாயையும் வெற்றிப் பெற செய்யுங்கள்.. விருத்தாசலத்தில் சண்முகப் பாண்டியன் பரப்புரை! Assembly Election 2026

என் தந்தையைப் போல் தாயையும் வெற்றிப் பெற செய்யுங்கள்.. விருத்தாசலத்தில் சண்முகப் பாண்டியன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com