West Bengal polls: மேற்கு வங்கத்தில் 284 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
West Bengal polls: மேற்கு வங்கத்தில் 284 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Published on: March 30, 2026 at 12:07 pm
Updated on: March 30, 2026 at 12:13 pm
கொல்கத்தா, மார்ச் 30, 2026: மேற்கு வங்காளத் தேர்தலில் காங்கிரஸ் 284 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது; ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பஹாரம்பூரில் போட்டியிடுகிறார்.
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கான 284 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அறிவித்தது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதுரி பஹாரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.பி. மௌசம் நூர் மலாட்டிபூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் பிரதீப் பிரசாத் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இறுதி பட்டியல் சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மேற்கு வங்காளத்தின் பல்வேறு தலைவர்கள், அதிர் ரஞ்சன் சௌதுரி, அம்பிகா சோனி, மதுசூதன் மிஸ்த்ரி, சல்மான் குர்ஷித், டி.எஸ். சிங்தேவ், கே.ஜே. ஜார்ஜ், பி.எல். புனியா, அமீ யாஜ்னிக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், மேற்கு வங்காளத்திற்கான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் குலாம் அஹ்மத் மிர் கலந்து கொண்டார்.
சட்டமன்ற தேர்தல்
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் மொத்தம் 294 இடங்களுக்கான தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க:மேற்காசிய பதற்றம்.. 24 மணி நேர கண்காணிப்பு.. இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை.. பிரதமர் நரேந்திர மோடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com