Tisaiyanvilai: திசையன்விளை அருகே காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tisaiyanvilai: திசையன்விளை அருகே காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Published on: March 18, 2026 at 10:46 am
திருநெல்வேலி, மார்ச் 18 2026: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பெட்டைக்குளம் அருகே காட்டுப்பகுதியில் நேற்று காலை தீப்பற்றி எரிந்த நிலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அக்கபம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது முழுவதும் எரிந்து கருகிய காரின் உள்ளே 4 உடல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னை சேர்ந்த முகமது ரபி, அவரது மனைவி நஸ்ரின் பாத்திமா மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் அப்ரின் பாத்திமா(வயது 15) மற்றும் மகன் முகம்மது காஜா (வயது 13) என்பது தெரியவந்துள்ளது.
அவர்கள் குடும்பம் கடன் சுமை காரணமாக கடும் பொருளாதார சிக்கலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடன் சுமையால் தனது வீட்டை சில மாதங்களுக்கு முன்பு விற்றதாகவும், இருப்பினும் சமாளிக்க முடியாத நிலையில் இருந்ததால் முகம்மது ரபி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
இந்த நிலையில், ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முகமது ரபி கார் கதவுகளை லாக் செய்து வாங்கி வைத்திருந்த பெட்ரோலை 4 பேர் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரவு முழுவதும் கார் தீபற்றி எரிந்ததால் முன் இருக்கையில் முகமது ரபியும் பின் இருக்கையில் மனைவி மற்றும் குழந்தைகள் இருவரும் எலும்புகூடுகளாக மீட்கப்பட்டனர்.
காரில் இருந்து உடல்களை மீட்கும் போது குழந்தைகள் தங்களது தாயை கட்டிஅணைத்தபடி எரிந்த நிலையில் இருந்தனர். இந்த காட்சி சம்பவ இடத்தில் இருந்தவர்களை கண்கலங்க வைத்தது. கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : புதுடெல்லியில் செந்தில் பாலாஜி.. 6.30 மணி நேரம் விசாரித்த சி.பி.ஐ.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com