சட்டமன்றத்தில் குரல் கொடுக்க 10 எம்.எல்.ஏ.,க்கள் தேவை.. மார்க்சிஸ்ட் கே. பாலகிருஷ்ணன்!

Assembly Election 2026: “10 எம்எல்ஏக்களாவது இருந்தால் தான் சட்டமன்றத்தில் கூடுதலாக பேச முடியும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Published on: March 14, 2026 at 11:37 pm

Updated on: March 14, 2026 at 11:48 pm

சென்னை மார்ச் 14, 2026; தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது; இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை இறுதி செய்ய தற்போது தொடங்கிவிட்டனர். இதற்கிடையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2021 சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது; ஆனால் கூடுதல் தொகுதிகள் கொடுக்க திமுக தரப்பில் உறுதியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த முறை வழங்கிய ஆறு தொகுதிகளை இம்முறை வழங்க முடியாது; அதற்குப் பதிலாக நான்கு அல்லது ஐந்து தொகுதிகள் வழங்கப்படும் என திமுக தரப்பு தெரிவித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு இடதுசாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்; மேலும் கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகள் அல்லது அதற்கு கூடுதலான தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என அவர்கள் கேட்பதாக தெரிய வருகிறது. இதற்கிடையில் திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணியில் புதிதாக கட்சிகள் வந்ததால் எங்களுக்கு உரிய தொகுதிகள் வழங்கவில்லை; நாங்கள் கேட்கும் தொகுதிகளை அவர்கள் கொடுப்பதில் சிக்கல் உள்ளது. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன என்றனர்.

கே பாலகிருஷ்ணன் பேட்டி

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இடம் கூடுதல் தொகுதிகள் கேட்பது ஏன்? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அவர், ” சட்டமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு போதிய நேரம் எங்களுக்கு கிடைப்பதில்லை; எங்களிடம் தற்போது இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். 10 எம்எல்ஏக்களையாவது இருந்தால் தான் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேச கூடுதல் நேரம் கிடைக்கும்” என்றார்.

இதையும் படிங்க; புதுச்சேரி அரசியலில் பரபரப்பு.. திமுக, காங்கிரஸ் பேச்சு வார்த்தை!

ரஜினிகாந்த் பாடல்களை சென்னை சூப்பர் கிங்ஸ் பயன்படுத்தக் கூடாது.. நீதிமன்றத்தில் சன் டிவி வழக்கு! Sun TV Petition

ரஜினிகாந்த் பாடல்களை சென்னை சூப்பர் கிங்ஸ் பயன்படுத்தக் கூடாது.. நீதிமன்றத்தில் சன் டிவி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com