சென்னை மெரினாவில் மாயமான இரண்டு வயது குழந்தை.. அதிரடி காட்டிய சிங்கப் பெண் படை!

Singappen Force Rescues Missing Kid : சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன இரண்டு வயது பெண் குழந்தையை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Published on: June 15, 2026 at 12:41 pm

சென்னை, ஜூன் 15, 2026: சென்னை மெரினா கடற்கரையில் காணாமல் போன இரண்டு வயது பெண் குழந்தையை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாலபத்ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேற்று மாலை மெரினா கடற்கரைக்கு வந்திருந்தார். இரவு நேரத்தில் குடும்பத்துடன் உறங்கிய நிலையில், விழித்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

குழந்தையை மணற்பரப்பில் தேடியும் கிடைக்காததால், எண் 100க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மெரினா காவல் நிலைய போலீசாரும், மயிலாப்பூர் சரக சிங்கப்பெண் அதிரடிப்படை குழுவினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ப்ளூ பீச் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, கடற்கரை முழுவதும் தீவிரமாக தேடுதல் நடத்தப்பட்டது.

அப்போது கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதியில், இரண்டு வயது சிறுமி தனியாக அழுது கொண்டிருப்பதை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர், குழந்தையின் தந்தை பாலபத்ராஜை காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். சிறுமி பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம், மெரினா கடற்கரை பகுதியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. கிறிஸ்தவ மதபோதகர் கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com