Thol Thirumavalavan: தூத்துக்குடியில் மாணவர் மீது சாதிவெறி தாக்குதல் நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் தொல். திருமாவளவன்.
Thol Thirumavalavan: தூத்துக்குடியில் மாணவர் மீது சாதிவெறி தாக்குதல் நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் தொல். திருமாவளவன்.

Published on: February 23, 2026 at 9:27 pm
சென்னை, பிப்.23, 2026: தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில் 11ஆம் வகுப்பு மாணவன் ஜீவானந்தம் அவர்களை பள்ளியில் வைத்தே சக மாணவர்கள் சாதிவெறியில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “இதுவரையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தொடர்ந்து, “பாதிக்கப்பட்ட மாணவனை காணொளியில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அரசும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, “இந்த சம்பவம் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது எனக் கூறியுள்ள அவர், மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் உதவித் தொகை முன்கூட்டியே வரவு.. அ.தி.மு.க. அழுத்தம் காரணமா? மு.க ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com