நான் தனுஷ் ரசிகை.. அவருடன் இணைந்து நடிக்க வேண்டும்.. மிருணால் தாகூர்

Mrunal Thakur: “நான் நடிகர் தனுஷின் தீவிர ரசிகை; அவருடன் இணைந்து நடிக்க வேண்டும்” என பாலிவுட் நடிகை மிருணால் தாகூர் தெரிவித்துள்ளார்.

Published on: February 20, 2026 at 11:06 pm

மும்பை, பிப்.20, 2026: “தாம் நடிகர் தனுஷின் ரசிகை என்று கூறிய மிருணால் தாகூர் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், “தனுஷ் சாரின் ‘ராயன்’, ‘மாரி’, ‘ராஞ்சனா’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற படங்களை பார்த்த பின் அவரது ரசிகையாக மாறிவிட்டேன். குறிப்பாக ‘அசுரன்’ படத்தை பல முறை கூட பார்ப்பேன்.

அவர் ஒரு கலைக்கூடம் போன்றவர். ஒரு நடிகராக அவரிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் உள்ளன. மேலும், அவர் ஒரு பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பல விஷயங்களை செய்கிறார். ‘Tere Ishk Mein’ படப்பிடிப்பில் அவரை சந்தித்த போது நான் தயங்கியபடி ‘சார் Son of Sardaar படத்தின் திரையிடலில் கலந்து கொள்ள முடியுமா’ என்று கேட்டேன். அவர் வருவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவர் மிகவும் தன்மையானவர். அவருடன் என்றாவது இணைந்து நடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ், நடிகை மிருணால் தாகூர் உடன் கிசுகிசுக்கப்படுகிறார். இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் அண்மையில் வதந்திகள் பரவின. இந்த நிலையில், நடிகை மிருணால் தாகூருடன் தனுஷ் உடனான நட்பு குறித்தும் பல பேட்டிகளில் கேட்கப்பட்டது. மேலும், இருவரும் சமீபத்தில் ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக காணப்பட்டதாகவும் வதந்திகள் பரவின. இந்த நிலையில் தனுஷ் குறித்து நடிகை மிருணால் தாகூர் பேசியிருப்பது கோடம்பாக்கத்தை சலசலக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: மருத்துவமனையில் சல்மான் கான் தந்தை.. தோழி கௌரி உடன் நலம் விசாரித்த ஆமிர் கான்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com