Raveena Tandon: நடிகை ரவீனா டண்டன் தன் மீதான வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
Raveena Tandon: நடிகை ரவீனா டண்டன் தன் மீதான வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Published on: February 18, 2026 at 1:32 pm
புதுடெல்லி, பிப்.18, 2026: ‘உயி அம்மா’ என்ற பாடல் வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் ரஷா தடானி மற்ற நட்சத்திரக் குழந்தைகள் மீது எதிர்மறை பரப்புரை செய்து தனது படத்தை உயர்த்துகிறாரா என்ற வதந்திகள் பரவின. இதற்கு, அவரது தாய் மற்றும் நடிகை ரவீனா டண்டன் நேரடியாக பதிலளித்துள்ளார். அதாவது, ஜூம் ஸ்பார்ட்லைட் போட்காட்ஸில் கலந்து கொண்ட அவர், இந்த வதந்திகளை முற்றிலும் மறுத்தார்.
இது குறித்து பேசிய நடிகை ரவீனா டண்டன், “என் மகள் ரஷாவின் குழு மற்ற நட்சத்திரக் குழந்தைகளுக்கு எதிராக பரப்புரை (PR) செய்தது என்பது தவறான குற்றச்சாட்டு. அவர்கள் எல்லாம் இன்னும் குழந்தைகளே. பலர் என் நண்பர்களின் பிள்ளைகள். அவர்களை எதிர்மறையாக காட்டுவது எங்கள் குடும்பத்தின் இயல்பல்ல” எனத் தெரிவித்தார். மேலும், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட ஒப்பீடுகள், பின்னர் விஷமமான ரசிகர் சண்டைகளாக மாறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “யாரும் இவ்வளவு கொடூரமாக, மற்றவர்களை கீழே தள்ளி தங்களை உயர்த்த மாட்டார்கள்” என்றும் எங்கள் குடும்பம் ஒருபோதும் நண்பர்களின் பிள்ளைகளை குறைத்து காட்டாது” என்றும் நடிகை ரவீனா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சண்டை காட்சிகளில் நடிக்க விரும்புகிறேன்.. பின்னணி காட்சிகள் பகிர்ந்த மாளவிகா மோகனன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com