Malavika Mohanan: “நடிகை மாளவிகா மோகனன் தனக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க விரும்புவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Malavika Mohanan: “நடிகை மாளவிகா மோகனன் தனக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க விரும்புவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Published on: February 18, 2026 at 1:16 pm
சென்னை, பிப்.18, 2026: நடிகை மாளவிகா மோகனன் தான் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க விரும்புவேன் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நான் ஆக்ஷன் காட்சிகளை செய்வதை விரும்புகிறேன். சிறு வயதிலிருந்தே விளையாட்டு ஆர்வம் கொண்டவள். உடலை சவாலுக்கு உட்படுத்துவது எனக்கு பிடிக்கும்.
ஒவ்வொரு படப்பிடிப்பிலும் ஸ்டண்ட் டபிள் இருப்பார். நடிகர்கள் தாங்களே ஸ்டண்ட் செய்தாலும், முதலில் ஸ்டண்ட் டபிள் ரிஹர்சல் செய்வார். பின்னர் நடிகர் இறுதி காட்சியை செய்வார்” எனத் தெரிவித்துள்ளார்
Been seeing a lot of tweets and articles about how I claimed to do my own stunts for ‘The Rajasaab’ but a body double did it as there’s a photo circulating online of a stunt artist who was my stunt double on the film.
— Malavika Mohanan (@MalavikaM_) February 13, 2026
Firstly, I do action because I really enjoy doing action.… pic.twitter.com/9ePwlLpti4
மேலும், “சில காட்சிகள் நடிகர்களுக்கு ஆபத்தானதாக இருந்தால், அதனை தொழில்முறை ஸ்டண்ட் கலைஞர் செய்வார். இது பாதுகாப்புக்காகதான்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, நடிகை மாளவிகா மோகனன் தனது பின்னணிக் காட்சிகள் சிலவற்றை பகிர்ந்து, தானே பல ஆக்ஷன் காட்சிகளை செய்ததை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இது, நடிகை மாளவிகா மோகனின் ஆக்ஷன் ஆர்வத்தையும், தொழில்முறை ஸ்டண்ட் நடைமுறைகளையும் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சல்மான் கான் தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com