SAFF U-19 Women’s title: இந்திய மகளிர் கால்பந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தி உலக கோப்பையை தனதாக்கியது.
SAFF U-19 Women’s title: இந்திய மகளிர் கால்பந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தி உலக கோப்பையை தனதாக்கியது.

Published on: February 9, 2026 at 1:41 pm
காத்மாண்டு, பிப்.9, 2026: நேபாளத்தின் போக்ரா ரங்கசாலா மைதானத்தில் நடைபெற்ற எஸ்.ஏ.எஃப்.எஃப் இளையோர்-19 மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, வங்காளதேசத்தை 4–0 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியின் கேப்டன் ஜுலன் நோங்மைதம் முதல் கோலை அடித்தார். தொடர்ந்து எலிசபெத் லக்ரா, பெர்ல் பெர்னாண்டஸ் மற்றும் மாற்று வீராங்கனை அன்விதா ராகுராமன் தலா ஒரு கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இதன் மூலம், லீக் கட்டத்தில் வங்காளதேசத்திடம் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பழிதீர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அபுதாபி மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகள்.. யார் யார் பங்கேற்கலாம்? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com