Pakistan bomb blast | பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி 2 சீனர்கள் உயிரிழந்தனர்.
Pakistan bomb blast | பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி 2 சீனர்கள் உயிரிழந்தனர்.
Published on: October 7, 2024 at 10:53 am
Updated on: October 7, 2024 at 11:02 am
Pakistan bomb blast | பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியின் சர்வதேச விமான நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த வெடிவிபத்தில் இரண்டு சீன பிரஜைகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இது “பயங்கரவாத தாக்குதல்” என்று விவரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், பிரிவினைவாத போராளிக் குழுவான பலூச் விடுதலை இராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். மற்றும் இரு உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பாகிஸ்தான் ஒளிபரப்பு ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது. மேலும், “குண்டுவெடிப்பின் தன்மை உடனடியாகத் தெரியவில்லை” என மாகாண அதிகாரி ஒருவர் கூறியதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
போர்ட் காசிம் எலக்ட்ரிக் பவர் கம்பெனியின் கான்வாய் மீது விமான நிலையம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள சீன குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் திட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடைமுறை மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளுக்கு தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com