போரா? பேச்சுவார்த்தையா? ஈரான் விவகாரத்தில் டிரம்பின் புதிய அறிவிப்பு!

US-Iran Tensions : ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த ராணுவத் தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Published on: August 2, 2026 at 3:28 pm

வாஷிங்டன், ஆக. 2, 2026: ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த ராணுவத் தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா ராணுவ நடவடிக்கைக்கு முழுமையாக தயாராக இருந்தாலும், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், ஈரானும் மேற்கு ஆசியாவின் சில நாடுகளும் ராணுவ நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டதாகவும், சாத்தியமான ஒப்பந்தத்திற்கான அடிப்படை அம்சங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த ஒப்பந்தத்தில் ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாக, முழுமையாக திறப்பது மற்றும் ஈரானின் அணு அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகியவை இடம்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், டிரம்ப் கூறிய இந்த தகவல்களை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்பு, கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களை ஈரான் நிறுத்தி, மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்பாவிட்டால் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் அப்பகுதியில் வசிக்கும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவைப்பட்டால் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்கவும் அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மறுபுறம், தாக்குதல் நடத்தப்பட்டால் இஸ்ரேலின் முக்கிய கட்டமைப்புகளையும், மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க எரிசக்தி நிலையங்களையும் குறிவைத்து பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் நிலநடுக்கம்… ஜப்பானில் அடுத்தடுத்த அதிர்வுகளால் மக்கள் அச்சம்!

புலம்பெயர்ந்தோர் நெருக்கடி எதிரொலி… ஸ்பெயினுடனான திறந்த எல்லை பயணத்தை இத்தாலி ஏன் நிறுத்தியது?
Schengen Row

புலம்பெயர்ந்தோர் நெருக்கடி எதிரொலி… ஸ்பெயினுடனான திறந்த எல்லை பயணத்தை இத்தாலி ஏன் நிறுத்தியது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com