Gun shooting in Pakistan | பாகிஸ்தானின் தென்மேற்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் 20 சுரங்கத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமுற்றனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சமீபத்திய தாக்குதல் தலைநகரில் ஒரு பெரிய பாதுகாப்பு உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் வியாழக்கிழமை இரவு டுகி மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் உள்ள விடுதிக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளனர்.
பலுசிஸ்தானின் பஷ்டூன் மொழி பேசும் மக்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் மூன்று பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைக்கும் சட்டவிரோத பலூச் விடுதலை இராணுவத்தின் மீது போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க
பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்….
பாகிஸ்தானில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்….
Pakistan PTI protest: பாகிஸ்தான் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்?…
பாகிஸ்தானில் ஷியா பிரிவினர் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 42 பேர் பலியாகினர்….
பாகிஸ்தானில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்