BJP vs Congress | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார். காங்கிரஸ், பா.ஜ.க கருத்து என்ன என்று பார்க்கலாம்.

February 17, 2025
BJP vs Congress | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார். காங்கிரஸ், பா.ஜ.க கருத்து என்ன என்று பார்க்கலாம்.
Published on: September 29, 2024 at 4:50 pm
BJP vs Congress | தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்.29, 2024) பதவியேற்கிறார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துணை முதலமைச்சராகும் உதயநிதிக்கு தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “ஒரே நாடு ஒரே தேர்தல் கசக்கிறது; ஒரே குடும்பம் ஒரே ஆட்சி இனிக்கிறதா? தி.மு.க முடியாட்சியை நோக்கி நகர்கிறது” என்றார். இதற்குப் பதலடி கொடுத்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் அதுபற்றி பேசட்டும், நாங்கள் பதிலளிக்கிறோம்” என்றார்.
மற்றொரு அமைச்சர் சேகர் பாபு, “பாஜக மக்கள் மத்தியில் செல்லாக்காசு ஆகிவிட்டது. அவர்களுக்கெல்லாம் பதில் கூற வேண்டும் என அவசியமில்லை” என்றார் காட்டமாக. இந்த நிலையில் உதயநிதி துணை முதல்வராகும் விவகாரத்தில் காங்கிரஸ், பாஜகவின் கருத்துக்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
செல்வ பெருந்தகை (காங்கிரஸ்)
“தி.மு.க ஆட்சியில் நிறை குறை இருந்தால் சொல்லுங்கள். ஆனால் யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும், வேண்டாம் என நீங்கள் கூற வேண்டாம். உதயநிதிக்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதாவினருக்குதான் பொதுவாழ்க்கை தகுதி இல்லை” என்றார்.
வானதி சீனிவாசன் (பா.ஜ.க எம்.எல்.ஏ)
“தமிழ்நாடு அரசியலில் வாரிசு மற்றும் ஊழல் அரசியலை தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும். நான் என் இதயத்தை பலப்படுத்தி வருகிறேன்” என கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மு.க. ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் திடீர் கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com