Mutual funds | மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் சந்தை சார்ந்து காணப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது, அதிகளவு ரிட்டன் கொடுக்கின்றன. எனினும், இந்தத் திட்டங்கள் சந்தையை சார்ந்து செயல்படுவதால் உத்தரவாதமான வருவாய் என்ற ஒன்று இருக்காது. பொதுவாக மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் ஸ்மால் கேப் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, லார்ஜ்கேப் ஃபண்டுகள் அதிக ஸ்திரத்தன்மை உடன் காணப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
மியூச்சுவல் ஃபண்டு திட்டம்
வருவாய் (%)
பரோடா பி.என்.பி பரிபாஸ் லார்ஜ் கேப் ஃபண்டு
20.25
கனரா ரொபேக்கா ப்ளூசிப் ஈகுவிட்டி ஃபண்டு
20.42
ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்டு
20.37
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ப்ளூசிப் ஃபண்டு
21.85
ஜே.எம். லார்ஜ் கேப் ஃபண்டு
20.41
இன்வெஸ்கோ இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு
20.39
கோடக் ப்ளூசிப் ஃபண்டு
20.22
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்டு
22.33
இந்த லார்ஜ் கேப் பரஸ்பர நிதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை வழங்கியுள்ளன.
(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)
SBI Patron interest rates: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்கிவருகிறது….
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.