Tamilisai Slams DMK : “கடந்த காலங்களில் குளு குளு ஊட்டி ஓர் கேடா என விமர்சித்தவர்கள் இவர்கள் (தி.மு.க) என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
Tamilisai Slams DMK : “கடந்த காலங்களில் குளு குளு ஊட்டி ஓர் கேடா என விமர்சித்தவர்கள் இவர்கள் (தி.மு.க) என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

Published on: April 26, 2026 at 10:46 pm
சென்னை, ஏப்.26, 2026: தமிழ்நாடு பா.ஜ.க. முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ஓட்டளிக்க வரிசையில் நின்ற மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட்டிருந்தபோதும், பணியில் இருக்க வேண்டிய தலைவர்கள் ஓய்வில் சென்றிருப்பதை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வாரிசுகளை கூட்டிக்கொண்டு கொடைக்கானலில் ஓய்வில் இருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். மேலும், துணை முதலமைச்சர் உதயநிதி அயல் நாட்டுப் பயணத்தில் இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.
ஓட்டளிக்க வரிசையில் நின்ற மக்கள் எல்லோரும் கோடையில் வீட்டில் தன் பணியில்.. ஆனால் பணியில் இருக்க வேண்டிய முதலமைச்சர் வாரிசுகளை கூட்டிக்கொண்டு கொடைக்கானலில்!!!… வாக்களிக்க துணை நின்ற மக்கள் தங்கள் அன்றாட பணியில் ஆனால் துணை முதலமைச்சர் அயல் நாட்டு பயணத்தில்…. அரசியல் என்பது…
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) April 26, 2026
இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஓட்டளிக்க வரிசையில் நின்ற மக்கள் எல்லோரும் கோடையில் வீட்டில் தன் பணியில்..
ஆனால் பணியில் இருக்க வேண்டிய முதலமைச்சர் வாரிசுகளை கூட்டிக்கொண்டு கொடைக்கானலில்!!!… வாக்களிக்க துணை நின்ற மக்கள் தங்கள் அன்றாட பணியில் ஆனால் துணை முதலமைச்சர் அயல் நாட்டு பயணத்தில்….
அரசியல் என்பது அனைவருக்கும் சமமே… திமுகவின் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை… அவர்களின் ஏற்றத்திற்காக அல்ல இற க்கத்திற்காகவே…
ஆய்வு செய்ய வேண்டியவர்கள் ஓய்விற்கு செல்கிறார்கள். ஆனால் இதே கூட்டம் தான் அன்று அரசு வேலையாக ஊட்டி சென்ற பெருந்தலைவர் காமராஜரை கும்பி எரியுது குடல் வேகுது குளு குளு ஊட்டி ஒரு கேடா என்று கேலி பேசியவர்கள்..
புரிந்து கொள்ளுங்கள் இவர்களை.. பொதுநலம் என்று பேசிக்கொண்டு தெரியும் இந்த சுயநலவாதிகளை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய கும்பல்.. மே 4ல் விடுதலை.. த.வெ.க நிர்மல் குமார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com