Tamil Nadu Cabinet reshuffle | தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றப்பட்டது. அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், கே.எஸ் மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன், எஸ்.எம் நாசர் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.ராஜேந்திரன், கோவி. செழியன் மற்றும் எஸ்.எம். நாசரும் தமிழக அமைச்சரவையின் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி
இவர்களுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (செப்.29, 2024) மாலை சென்னை ராஜ்பவனில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதில் செந்தில் பாலாஜி மற்றும் ஆவடி நாசர் ஆகியோர் ஏற்கனவே மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்கள் ஆவார்.
உதயநிதி ஏற்கனவே அமைச்சராக இருப்பதால் அவர் பதவி ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமையை (செப்.28, 2028) துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், செழியனுக்கு உயர்கல்வி இலாகா வழங்கப்பட்டுள்ளது.
நாசர், சிறுபான்மையினர் நலன் மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கான அமைச்சராகவும், ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மே 7, 2021 அன்று பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், தமிழக அமைச்சரவை மாற்றம் கண்டது.
அப்போது, போக்குவரத்து அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனின் இலாகா விலக்கப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்து இலாகாவும் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஆண்டு டிசம்பரில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
முந்தைய மாற்றங்கள்
இந்த நிலையில், மே 2023 இல், அமைச்சரவை மேலும் மாற்றங்களுக்கு உட்பட்டது. டி.ஆர்.பி. ராஜா அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக சேர்க்கப்பட்டார், அதுவரை அந்த இலாகா தங்கம் தென்னரசு வசம் இருந்தது. பழனிவேல் தியாக ராஜன் வகித்து வந்த நிதி இலாகா தங்கம் தென்னரசு வசம் ஒப்படைக்கப்பட்டது.
பழனி வேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப இலாகா ஒதுக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப துறையை கவனித்துவந்த மனோ தங்கராஜ் பால்வளத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். அந்தத் துறையை கவனித்துவந்த ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Udhayanidhi Shirt Issue | உதயநிதி ஆடை விவகாரம் குறித்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது….
IAS Transfer | தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி துணை செயலாளராக ஆர்த்தி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….
Udhayanidhi T-Shirt Issue | துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்த வழக்கில் அரசு பதிலளிக்க…
Udhayanidhi replies to Vijay | நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு உதயநிதி கொடுத்த பதில் என்ன தெரியுமா?…
Udhayanidhi Stalin | தமிழ்நாட்டில் ஆன்மிகமும், அரசியலும் என்றைக்கும் கலக்காது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்